Devathai
தேவதை என் தேவதை ஒரு குழந்தைக்கு தாய் ஆனால் அவளே ஒரு குழந்தை கருங்குயிலின் ஓசை தோற்றுவிடும் அவள் குரலிசையில் பெண்ணில் அழகு முகத்தில் என்பர் இவள் அழகோ அகத்தில் தாய்மையை தோற்கடிக்கும் தாய்மை மனம் படைத்தவள் உறவுகளை பேணுவதில் பால் பருவ உறவு அவள்.. பாலுணர்வு தாண்டிய நேசம் அவள் வாழ்கையை தனியொருவளாக எதிர்கொள்ளும் பெண் சிங்கம்.. ஆம் மென் சிங்கம்... கூர் விழியால் கோவைச் செவ்விதழாள் பால் முகத்தாள் பால் மனத்தாள் பாலகனை வென்றெட்டுத்தாள் தேவதை.. என் தேவதை