ad

Devathai

தேவதை

 

என் தேவதை

ஒரு குழந்தைக்கு தாய்

ஆனால்

அவளே ஒரு குழந்தை

 

கருங்குயிலின் ஓசை

தோற்றுவிடும்

அவள் குரலிசையில்

 

பெண்ணில் அழகு முகத்தில் என்பர்

இவள் அழகோ அகத்தில்

 

தாய்மையை தோற்கடிக்கும் தாய்மை

மனம் படைத்தவள்

உறவுகளை பேணுவதில்

 

பால் பருவ உறவு அவள்..

பாலுணர்வு தாண்டிய

நேசம் அவள்

 

வாழ்கையை தனியொருவளாக

எதிர்கொள்ளும் பெண் சிங்கம்..

ஆம்

மென் சிங்கம்...

 

கூர் விழியால்

கோவைச் செவ்விதழாள்

பால் முகத்தாள்

பால் மனத்தாள்

 

பாலகனை வென்றெட்டுத்தாள்

 

தேவதை..

என் தேவதை

Comments

Popular posts from this blog

About Sports Part 2

About Sports

About Exercises